நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி : கோவை குண்டு வெடிப்பு குற்றவாளி இறுதி ஊர்வலத்திற்கு அனுமதி அளித்த தமிழக அரசை கண்டித்து கோவையில் பா.ஜ.,மாநில தலைவர் அண்ணாமலை, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் ஆகியோர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இவர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆண்டிபட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.,பொதுக்குழு உறுப்பினர் சரவணன், நகர் தலைவர் விமல்குமார், துணைத்தலைவர் ராஜா, நகர் செயலாளர் நாகேந்திரன், ஹிந்து முன்னணி நகர் பொதுச்செயலாளர் பகவதி ராஜ்குமார், நகர் செயலாளர் முத்துக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்