/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மதுபாரை மூடக்கோரி பா.ஜ., ஆர்ப்பாட்டம்
/
மதுபாரை மூடக்கோரி பா.ஜ., ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 30, 2025 04:34 AM
போடி: போடி அருகே சங்கராபுரம் தேவாரம் செல்லும் மெயின் ரோட்டில் கருப்பசாமி கோயில், அரசு பள்ளி உள்ளது.
கோயில் அருகே மூன்று நாட்களுக்கு முன்பு தனியார் மதுபார் திறக்கப்பட்டது. பாருக்கு வருவோர் மது அருந்தி விட்டு கோயில், பள்ளி வளாகம், பகுதிகளுக்கு சென்று விடுகின்றனர். அங்கேயே போதையில் அட்டகாசம் செய்து வருகின்றனர். இதனால் போக்குவரத்திற்கு இடையூறு, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இதனால் மதுபாரை முடக்கோரி பா.ஜ., சார்பில் சங்கராபுரத்தில் ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் நடந்தது. மாவட்ட பொதுச் செயலாளர்கள், மலைச்சாமி, வினோத், முத்துமணி, மாவட்ட துணைத் தலைவர் மோகன்தாஸ், பொருளாளர் பொன் ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

