/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியகுளத்தில் பா.ஜ., பொதுக்கூட்டம்
/
பெரியகுளத்தில் பா.ஜ., பொதுக்கூட்டம்
ADDED : ஜூன் 03, 2025 12:47 AM

--பெரியகுளம்: ஆப்பரேஷன் சிந்தூர் வெற்றியை தந்த முப்படை வீரர்கள், பிரதமர் மோடி ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக் கூட்டம் பா.ஜ., சார்பில் பெரியகுளம் புது பஸ் ஸ்டாண்ட் பிரிவில் நடந்தது.
மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் வினோத்குமார், மாவட்ட துணைத் தலைவர் மோகன்தாஸ், நகரத் தலைவர் திவ்யா முன்னிலை வகித்தனர்.
முன்னாள் மாநில கூட்டுறவு பிரிவு செயலர் சிவக்குமரன் வரவேற்றார். முன்னாள் மாவட்ட தலைவர்கள் பாண்டியன், வெங்கடேசன், கவுன்சிலர்கள் வசந்த் பாலாஜி, சண்முகசுந்தரம் உட்பட ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன் பேசுகையில், ''பாகிஸ்தான் நாட்டின் மலைப் பகுதியில் மறைவாக வைத்துள்ள அணுகுண்டு பகுதியை, நமது நாட்டின் ராணுவத்தினர் உளவுத்துறையினர் மூலம் கண்டறிந்து 'ட்ரோன்' மூலம் துல்லியமாக தாக்கினர்.
இதனால் பாகிஸ்தானை நிலை குலையச் செய்தனர். இந்தியா - பாக்., இடையே எல்லையில் நான்கு நாட்கள் மோதல் நீடித்தது.
பாக்., கெஞ்சியதை தொடர்ந்து சண்டை முடிவுக்கு வந்தது. இதன் மூலம் உலக நாடுகள் இந்திய இராணுவத்தின் வலிமையை உற்று பார்க்கின்றனர். ஒட்டுமொத்த இந்தியர்களும், இராணுவம் தேசத்தின் பக்கம் நிற்க வேண்டும்.
ஜூன் 22ல் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடக்க உள்ளது.
இதில் அனைவரும் குடும்பத்தோடு பங்கேற்க வேண்டும்., என்றார். முன்னாள் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கோபி கண்ணன் நன்றி கூறினார்.
--