ADDED : மே 25, 2025 05:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தமபாளையம் : உத்தமபாளையத்தில் இந்திய இராணுவத்தின் சிந்தூர் ஆபரேசனைஆதரித்தும், பிரதமர் மோடியை பாராட்டியும், 'இந்திய இராணுவத்திற்கு துணை நிற்போம்' என்ற கோஷத்துடன்பா.ஜ., சார்பில் ஊர்வலம் நடந்தது.
நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்த ஊர்வலம் பஸ் ஸ்டாண்ட் அருகே நிறைவு பெற்றது. அங்கு நடந்த கூட்டத்திற்கு நகர் பா.ஜ. தலைவர் நாகவேல் தலைமை வகித்தார். மாவட்ட பா.ஜ. துணை தலைவர் தங்க பொன்ராஜா , முன்னாள்இளைஞர் அணி மோடி கார்த்திக், மாவட்டச் செயலாளர் பரமசிவம், மாவட்ட பொதுச் செயலாளர் முத்து மணி, நகர் நிர்வாகிகள் தெய்வம், தியாகராசன் உள்ளிட்ட பா.ஜ. ஹிந்து முன்னணி, விஸ்வ ஹிந்துபரிசத், ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் மேலும் பல் வேறு ஹிந்து இயக்க நிர்வாகிகளும் பங்கேற்றனர்.