ADDED : மார் 18, 2025 05:46 AM

தேனி: தமிழகத்தில் அமலாக்கதுறை சோதனையில் டாஸ்மாக் மூலம் ரூ.ஆயிரம் கோடி முறைக்கேடு நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
நேற்று சென்னையில் டாஸ்மாக் அலுவலகம் முன் அண்ணாமலை போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் அண்ணாமலை மற்றும் பா.ஜ., தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைதினை கண்டித்து தேனி கலெக்டர் அலுவலகம் முன் பா.ஜ., மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் கட்சியினர் ரோடு மறியலில் ஈடுபட்டனர். முன்னாள் மாவட்ட தலைவர் பாண்டியன், மாவட்ட செயலாளர் மலைச்சாமி உள்ளிட்டோர் மறியலில் பங்கேற்றனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் உட்பட 52 பேரை போலீசார் கைது செய்தனர்.
போடி: பா.ஜ., தலைவர் சித்ராதேவி தலைமையில் ரோடு மறியலில் ஈடுபட முயன்ற நகர செயலாளர் குருநாதன், பொதுச் செயலாளர் சரவணன், முன்னாள் மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் உட்பட 16 பேரை போடி டவுன் போலீசார் கைது செய்தனர்.
ஆண்டிபட்டி: பா.ஜ., நகர் தலைவர் மனோஜ்குமார் தலைமையில் ஆண்டிபட்டி வைகை ரோடு சந்திப்பில் மறியல் செய்தனர்.
மறியலில் ஈடுபட்ட பா.ஜ., நிர்வாகிகள் ராமச்சந்திரன், கார்த்திக், நாகேந்திரன், சுரேஷ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
கம்பம்: கம்பத்தில் 24 பேர், உத்தமபாளையத்தில் 4 பேர், சின்னமனூரில் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.