/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பா.ஜ., மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் நாளை தேனி வருகை
/
பா.ஜ., மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் நாளை தேனி வருகை
பா.ஜ., மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் நாளை தேனி வருகை
பா.ஜ., மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் நாளை தேனி வருகை
ADDED : நவ 23, 2025 03:37 AM
தேனி: பா.ஜ., மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தேனி மாவட்டத்திற்கு நாளை வருகிறார்.
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்' என்ற தலைப்பில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக தேனி மாவட்டத்தில் இருநாட்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். நாளை(நவ.,24) மாலை தேனி பங்களா மேட்டில் நடைபெறும் பொதுகூட்டத்தில் பேசுகிறார். நாளை மறுநாள் (நவ.,25) போடி கரட்டுப்பட்டியில் மலைமாடுகள் வளர்க்கும் விவசாயிகளை சந்தித்து மலையில் மாடுகள் மேய்ச்சல் தொடர்பாக பேசுகிறார். இதனை தொடர்ந்து வியாபாரிகள், வணிகர்களுடன் ஜி.எஸ்.டி., குறைப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தெரிவித்தார்.