ADDED : ஆக 16, 2026 07:31 PM
அ நிறம் | அளவு
தேனி, ஆக.17–
தேனி நேரு சிலை அருகே புதுடில்லியில் சுதந்திர தின விழாவின்போது காங்., தலைவர்கள் சோனியா, ராகுல், மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் வந்தே மாதரம் பாடலை அவமதிப்பு செய்ததை கண்டித்து பா.ஜ., சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர்கள் மலைச்சாமி, வினோத் குமார், துணை தலைவர் மோகன்தாஸ், இளைஞர் அணி தலைவர் விஜய், தேனி நகர தலைவர் ரவிக்குமார், மகளிர் அணி தலைவர் பாண்டீஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
