ADDED : ஆக 16, 2026 07:21 PM
அ நிறம் | அளவு
தேனி, ஆக.
17–
தேனி தனியார் ஓட்டலில் மாநில அரிசி ஆலை உரிமையாளர்கள், நெல், அரிசி வணிகர்கள் சங்கங்களின் சம்மேளன பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் தலைவர் துளசிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட முன்னாள் தலைவர் ராம்சிங், மாவட்ட தலைவர் செல்வக்குமார் முன்னிலை வகித்தனர். தேனி மாவட்ட செயலாளர் தர்மராஜன் வரவேற்றார். மாநில செயலாளர் மோகன், மாநில பொருளாளர் கணேச அருணகிரி, துணை தலைவர் சுரேந்தர் ராம்சிங், பொருளாளர் ராஜ்குமார் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
