ADDED : மே 15, 2025 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று இ நாம் ஏலம் மூலம் கருப்பு எள் விற்பனை செய்யப்பட்டது. ஒரு விவசாயி 342 கிலோ கருப்பு எள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தார்.
ஏலத்தில் 6 வியாபாரிகள் பங்கேற்றனர். எள் கிலோ ரூ.130க்கு ஏலம் சென்றது, மொத்தம் ரூ.44,460க்கு விற்பனையானது. விவசாயிகள் தங்கள் வேளாண் விளை பொருட்களை ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் விற்று லாபமடையலாம் என ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் விபரங்களுக்கு தேனி சுக்குவாடன்பட்டியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை நேரில் அணுகலாம். அல்லது 99766 30746 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.