/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அஞ்சனை மைந்தா அருள்புரிவாய்! ஆஞ்சநேயருக்கு வெற்றிலை வடைமாலையில் அலங்காரம்
/
அஞ்சனை மைந்தா அருள்புரிவாய்! ஆஞ்சநேயருக்கு வெற்றிலை வடைமாலையில் அலங்காரம்
அஞ்சனை மைந்தா அருள்புரிவாய்! ஆஞ்சநேயருக்கு வெற்றிலை வடைமாலையில் அலங்காரம்
அஞ்சனை மைந்தா அருள்புரிவாய்! ஆஞ்சநேயருக்கு வெற்றிலை வடைமாலையில் அலங்காரம்
ADDED : ஜன 12, 2024 06:44 AM

-பெரியகுளம் : பெரியகுளம் பாம்பாற்று ராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா கோலாலமாக நடந்தது. மங்கள இசையுடன் புண்ணியாவாசம், பஞ்சகவ்யம், வேதிகா அர்ச்சனை, பஞ்ச முகார்ச்சனை, ஆஞ்சநேயர் மூல மந்திர ஹோமம், ஆஞ்சநேயர் ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார். பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. பெரியகுளம் ஈச்சமலை மகாலட்சுமி கோயிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு 12 அடி உயர விஷாஆஞ்சநேயருக்கு, செந்துருக்கும், சந்தனம், பால், தயிர், இளநீர் உள்ளிட்ட 11 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை, துளசி மாலை, வடைமாலை அணிவித்து சிறப்பு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை டாக்டர் மகா ஸ்ரீ ராஜன் செய்திருந்தார்.பெரியகுளம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வீரஆஞ்சநேயர், பாலசுப்பிரமணியர் கோவிலில் ஆஞ்சநேயர்,
வடகரை மேதகாரபடித்துறையில் ராமபக்த ஆஞ்சநேயர், லட்சுமிபுரம் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் ஆஞ்சநேயர் சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தது.
ஆண்டிபட்டி: மேற்கு ஓடை தெருவில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமிக்கு விபூதி, மஞ்சள், குங்குமம், பால், தயிர், தேன், இளநீர், பழங்கள், சந்தனம் உட்பட 21 வகையான அபிஷேகமும் பூஜைகளும் நடந்தது. சுவாமிக்கு வெள்ளி காப்பு அணிவிக்கப்பட்டு மலர் மாலைகள், வடை மாலை சாத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் பலர் தங்கள் வேண்டுதல் நிறைவேற கோயிலில் பிரார்த்தனை, அர்ச்சனை செய்தனர். பக்தர்களுக்கு துளசி, செந்தூரம், லட்டு, கேசரி, வடை ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டன அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
போடி: சீனிவாசப் பெருமாள் கோயிலில் வடை, வெற்றிலை மாலை அலங்காரத்தில் அனுமனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. ஏற்பாடுகளை தக்கார் மாரிமுத்து, சுவாமி அலங்காரத்தினை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அனுமனின் தரிசனம் பெற்றனர்.
உத்தமபாளையம்: அனுமந்தன்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில் ஹனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. மார்கழி அமாவாசை திதியில் மூல நட்சத்திரத்தில் ஹனுமன் அவதரித்தார். அந்த நாளை ஹனுமன் ஜெயந்தி என்று கொண்டாடுகின்றோம்.
நேற்று அதிகாலையில் விஸ்வரூப தரிசனம், தொடர்ந்து கால சாந்தி பூஜை, சகஸ்ரநாம பூஜை, புஸ்பாஞ்சலி நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் பால்குட ஊர்வலம், ஹோமம் போன்ற சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அனுமன் ஸ்வர்ண அலங்காரத்தில் எழுந்தருளினார். அதிகாலை முதல் பல்வேறு ஊர்களை சேர்ந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு துளசி மாலை, வாழைப்பழம், வடை, கேசரி, சர்க்கரை பொங்கல், குங்குமம் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அன்னதானம் நடைபெற்றது. ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மூலவர் சன்னதி முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.