/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மருத்துவ கல்லுாரியில் ரத்ததான முகாம்
/
மருத்துவ கல்லுாரியில் ரத்ததான முகாம்
ADDED : ஜூலை 12, 2025 04:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : பெரியகுளம் லிட்டில் பிளவர் அறக்கட்டளை சார்பில், தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடந்தது. முகாமை ரத்த வங்கி மருத்துவஅலுவலர் டாக்டர் பிரியா துவக்கி வைத்தார்.
அறக்கட்டளை தலைவர் பொன்விஜய் ஆனந்தராஜ் முன்னிலை வகித்தார். 20க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கினர்.
ஏற்பாடுகளை அறக்கட்டளை செயலாளர் பிரியா சகாயராணி, உறுப்பினர்கள் சுரேஷ், சதிஸ்குமார் செய்திருந்தனர். ரத்த வங்கி பணியாளர்கள் வெவ்வேறு வகைகளில்20 யூனிட் ரத்தம் பெற்று வங்கியில் சேமித்தனர்.