நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி : உலக சகோதரத்துவ தினத்தை முன்னிட்டு போடி பிரம்மா குமாரிகள் ராஜயோக தியான மையத்தில் ரத்ததான முகாம் நடந்தது.
பிரம்மா குமாரி பொற்கலை தலைமை வகித்தார். மாவட்ட தலைமை குருதி மைய மருத்துவ அலுவலர் பாரதி முன்னிலை வகித்தார். முகாமில் 50 க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினர். சான்றிதழ், ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டன.