/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்த சேமிப்பு மையம் தேவை
/
ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்த சேமிப்பு மையம் தேவை
ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்த சேமிப்பு மையம் தேவை
ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்த சேமிப்பு மையம் தேவை
ADDED : ஏப் 19, 2025 01:11 AM
கூடலுார்:
கூடலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்த சேமிப்பு மையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூடலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் கூடலுார், லோயர்கேம்ப், காஞ்சிமரத்துறை, பளியன்குடி, வெட்டுக்காடு, கேரளா உள்ளிட்ட பகுதியிலிருந்து பிரசவத்திற்காக அதிகம் வருகின்றனர்.
அதனால் சில மாதங்களுக்கு முன் நடந்த வட்டார சுகாதார பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் அவசர தேவைக்காக ரத்த சேமிப்பு வங்கி அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் பிறந்த குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவு ஏற்படுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டது. இதுவரை இதற்கான நடவடிக்கை இல்லை.
8 கி.மீ., தூரத்தில் கம்பம் அரசு மருத்துவமனை இருப்பதால் கூடலுார் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரத்த சேமிப்பு வங்கி அவசியம் இல்லை என மருத்துவத் துறை தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
இருந்த போதிலும் அவசர தேவைக்காக ரத்தம் இருப்பு வைக்கும் வகையில் ரத்த சேமிப்பு மையம் விரைவில் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.