/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேசிய சிலம்பம் போட்டியில் போடி மாணவர்கள் முதலிடம்
/
தேசிய சிலம்பம் போட்டியில் போடி மாணவர்கள் முதலிடம்
தேசிய சிலம்பம் போட்டியில் போடி மாணவர்கள் முதலிடம்
தேசிய சிலம்பம் போட்டியில் போடி மாணவர்கள் முதலிடம்
ADDED : டிச 13, 2025 05:44 AM
போடி: தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் போடி மாணவர்கள் முதலிடம் பெற்று சர்வதேச அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.
தேசிய அளவிலான சிலம்ப போட்டி பெங்களூரு என்.எம்.ஆர்., கன்வன்ஷன் சென்டரில் நடந்தது. 50 க்கும் மேற்பட்ட அணிகளில் போடி ஸ்ரீ சாய் அகடாமி மார்சியல் ஆர்ட்ஸ் சார்பில் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 8 மாணவர்கள் முதலிடமும், 4 மாணவர்கள் இரண்டாம் இடமும் பெற்று சாதனை படைத்து உள்ளனர்.
5 வயதுக்கு உட்பட்ட 20- 25 கிலோ எடை பிரிவில் நடந்த இரட்டை கம்பு வீச்சு போட்டியில் போடி சவுண்டீஸ்வரி நடு நிலைப்பள்ளி மாணவி ரியா ஸ்ரீ., 10 வயதுக்கு உட்பட்ட 30-35 கிலோ எடை பிரிவில் போடி ஸ்பைஸ் வாலி பப்ளிக் பள்ளி மாணவர் பவிசன் முதலிடமும், 14 வயதுக்கு உட்பட்ட 45-50 கிலோ எடை பிரிவில் கோவிந்தநகரம் கம்ப தர்மா உயர்நிலைப்பள்ளி மாணவர் சிவசக்தி முதலிடமும், 40-45 கிலோ எடை பிரிவில் கம்பம் ஆர்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளி மாணவர் விபிசன், வித்வின், 30-35 எடை பிரிவில் தேவவரதன் முதலிடம் பெற்று பெற்றனர். 25-30 கிலோ எடை பிரிவில் டோவிட்டா இரண்டாம் இடம் பெற்றார்.
17 வயதுக்குட்பட்ட 65- 70 கிலோ எடை பிரிவில் கம்பம் ஆர்.ஆர். இன்டர் நேஷனல் பள்ளி மாணவர் தேவகணேஷ், 80 - - 90 கிலோ எடை பிரிவில் ஜெயசூர்யா முதலிடமும், 10 வயதுக்கு உட்பட்ட 30 -- 35 கிலோ எடை பிரிவில் கம்பம் ஆர்.ஆர்., இண்டர்நேஷனல் பள்ளி மாணவர் அதிரத், 25 -- 30 கிலோ எடை பிரிவில் ருத்வ அத்வைத், ஆதர்ஷன் 2 ம் இடமும் பெற்று சாதனை படைத்து உள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்கள் சர்வதேச போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்கள், மாஸ்டர் ஜெயசீலன், பயிற்சியாளர் விமலா தேவியை போடி நகர தி.மு.க., நகர செயலாளர் புருஷோத்தமன் பாராட்டி பரிசு வழங்கினார்.

