/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தங்கும் விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
/
தங்கும் விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : ஆக 31, 2025 04:15 AM
மூணாறு: மூணாறில் மாட்டுபட்டி ரோடு மற்றும் போதமேடு ஆகிய பகுதிகளில் உள்ள நட்சத்திர அந்தஸ்து கொண்ட இரண்டு தனியார் தங்கும் விடுதிகளுக்கு வெடி குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக நேற்று காலை இ-மெயில் வாயிலாக தகவல் வந்தது. விடுதி நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இடுக்கியைச் சேர்ந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மோப்ப நாயின் உதவியுடன் இரண்டு தங்கும் விடுதிகளிலும் சோதனையிட்டனர். அதில் வெடிகுண்டு எதுவும் சிக்காததால் புரளி என தெரியவந்தது.
மூணாறு டி.எஸ்.பி. அலெக்ஸ்பேபி தலைமையில் போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவத்தால் இரண்டு தங்கும் விடுதிகளிலும் ஊழியர்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர்.

