/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி மருத்துவக் கல்லுாரியில் துவங்கிய புத்தக கண்காட்சி
/
தேனி மருத்துவக் கல்லுாரியில் துவங்கிய புத்தக கண்காட்சி
தேனி மருத்துவக் கல்லுாரியில் துவங்கிய புத்தக கண்காட்சி
தேனி மருத்துவக் கல்லுாரியில் துவங்கிய புத்தக கண்காட்சி
ADDED : ஜூலை 17, 2025 11:58 PM

தேனி: தேனி அரசு மருத்துவக் கல்லுாரி ஆடிட்டோரியத்தில் பல்வேறு தலைப்புகளில் மருத்துவத்துறை சார்ந்த 18 ஆயிரம் புத்தகங்கள் கண்காட்சியில் இடம்பெற்றன.
நேற்று துவங்கி நாளை வரை நடக்கிறது. கண்காட்சியை கல்லுாரி முதல்வர் டாக்டர் முத்துச்சித்ரா துவக்கி வைத்தார். கண்காணிப்பாளர் டாக்டர் விஜயானந்த், கல்லுாரி துணை முதல்வர் டாக்டர் தேன்மொழி, நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சிவக்குமரன், உதவி நிலைய மருத்துவ அலுவலர்கள் டாக்டர் ஈஸ்வரன், டாக்டர் மணிமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவக் கல்லுாரியின் நுாலக குழு செயலாளர்டாக்டர் பாலசுப்பிரமணியன், நுாலக குழு உறுப்பினர்கள் டாக்டர்கள் சங்கரேஸ்வரி, லட்சுமணக்குமார், டாக்டர் வெங்கடேஷ், இளநிலை, முதுகலை மருத்துவ மாணவர்கள் ஸ்டால்களை பார்வையிட்டனர். ஏற்பாடுகளை நுாலகர் கோபிநாத் செய்திருந்தார்.
கண்காட்சியில் பெங்களூரு, மதுரை, சென்னையில் உள்ள மருத்துவ புத்தக விற்பனை நிறுவனங்கள் புத்தகங்களை காட்சிப்படுத்தினர். புத்தகங்கள் 30 சதவீத தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.