ADDED : ஜன 20, 2025 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் தொண்டை மண்டல முதலியார் சங்க ஆண்டு விழா, தனியார் மண்டபத்தில் நடந்தது. சங்கத் தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். கவுரவ ஆலோசகர் ரத்தினவேலு, நிர்வாகிகள் மோகன், ரவி, ராஜவேல் முன்னிலை வகித்தனர். முன்னாள் தலைவர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். வர்த்தக பிரமுகர்கள் ஜெகன், பாபு, கார்த்திகேயன், தியாகராஜன், சுகுமாறன், சம்பத், சீனிவாசன், நமச்சிவாயம், ஹரிகரன் பங்கேற்றனர். ரத்தினவேலு- சரஸ்வதி அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
ஓய்வு பேராசிரியை பிரேமா எழுதிய 'நுாறு பெண்கள், நூறு சிறுகதைகள்' என்ற தலைப்பில் நுால் வெளியிடப்பட்டது. சங்கத் துணைச் செயலாளர் முத்துக்குமார் நன்றி தெரிவித்தார்.-