நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி மாவட்ட மைய நுாலகத்தில் சித்ராசிவன் எழுதிய அத்தினி நுால் அறிமுக விழா நடந்தது. நாவலாசிரியர் நடேசன் தலைமை வகித்தார். ஓவியர் ராமமூர்த்தி வரவேற்றார்.
ஓய்வு பெற்ற கல்வித்துறை அலுவலர் மணிவண்ணன், எழுத்தாளர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தனர். நுால் அறிமுகம் செய்து எழுத்தாளர்கள் காமுத்துரை, தேனி சீருடையான், அல்லிஉதயன், ஹேமலதா, பொறியாளர் பொன்முடி, நுால் எழுதிய எழுத்தாளர் சித்ராசிவன் பேசினர்.
பேராசிரியர்கள் செந்தில், ஜோதிபாரதி நிகழ்வை தொகுத்து வழங்கினார்கள்.
கவிஞர்கள் ஜெகதீஷ், இதயநிலவன், பட்டிமன்ற நடுவர் சேதுராம், மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

