ADDED : ஜன 09, 2025 07:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு:   மத்தியபிரதேசத்தை சேர்ந்த 16 பேர் கொண்ட குழுவினர் கேரளமாநிலம் மூணாறுக்கு சுற்றுலா வந்தனர்.
இவர்கள் சித்திராபுரத்தில்  தனியார் விடுதியில் தங்கினர். 9 வயது சிறுவன் பிராக்ய பலால்  விடுதியின் ஆறாவது மாடியில் அறையில் பெற்றோருடன்  தங்கினார்.
நேற்று முன்தினம் இரவு நாற்காலி மீதுஏறி ஜன்னலை திறக்க முயன்ற சிறுவன் , எதிர்பாராத வகையில் அதன் வழியாக கீழே விழுந்தான். பலத்த காயமடைந்த பிராக்ய பலால், அங்கமாலி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தான்.
இயற்கைக்கு மாறான மரணம் என வெள்ளத்துாவல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

