/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நீர்த்தேக்கத்தில் மூழ்கிய சிறுவன் உடல் மீட்பு
/
நீர்த்தேக்கத்தில் மூழ்கிய சிறுவன் உடல் மீட்பு
ADDED : செப் 22, 2024 04:05 AM
மூணாறு, : கட்டப்பனை அருகே ஓணப் பண்டிகை விடுமுறையை கொண்டாட வந்தபோது இரண்டு சிறுவர்கள் நீர் தேக்கத்தில் மூழ்கிய சம்பவத்தில் மாயமான சிறுவனின் உடல் மீட்கப்பட்டது.
இடுக்கி மாவட்டம் கட்டப்பனை அருகே இரட்டையாறு பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு ரஜிதா, அவரது சகோதரர் ரதீஷ் ஆகியோர் ஓணப் பண்டிகையை கொண்டாட குடும்பத்தினருடன் வந்தனர்.
ரஜிதா மகன்கள் அனுஹர்ஷன், அதுல்ஹர்ஸ் 12, மற்றும் ரதீஷ், மகன்கள் ஆதித்தியன், அசவுரேஷ் 12, ஆகியோர் செப்.19ல் இடுக்கி அணை நீர் தேக்கத்தின் ஒரு பகுதியான இரட்டையாறு பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது நீர் தேக்கத்திற்குள் சென்ற அதுல்ஹர்ஸ், அசவுரேஷ் ஆகியோர் தண்ணீரில் மூழ்கி மாயமாகினர்.
உடனிருந்த சிறுவர்கள் அளித்த தகவலின்படி, அப்பகுதி மக்கள் நீர்தேக்கத்தில் தேடி அதுல்ஹர்ஸ் உடலை சிறிது நேரத்தில் மீட்டனர். தண்ணீரில் மாயமான அசவுரேஷை போலீசார், தீயணைப்பு துறையினர் ஆகியோர் தேடி வந்த நிலையில், அவரது உடலை நேற்று முன்தினம் மீட்டனர்.