ADDED : ஆக 26, 2025 04:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: டொம்புச்சேரி பட்டாளம்மன் கோயில் தெரு ராமதாஸ் 45. இவரது மகன் குருபிரசாத் 9. அப்பகுதி பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார்.
டொம்புச்சேரி பத்ரகாளிபுரம் செல்லும் ரோட்டில் காளவாசல் அருகே ரோட்டை குருபிரசாத் கடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த டூவீலர் சிறுவன் மீது மோதி நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயம் அடைந்த சிறுவனை, அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.