/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அறிவு சார் மைய திறப்பு விழாவில் 15 தி.மு.க., கவுன்சிலர்கள் புறக்கணிப்பு

ADDED : ஜன 06, 2024 06:40 AM

தேனி: தேனி அல்லிநகரம் நகராட்சி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்ட்டில் ரூ.2 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட அறிவுசார் மையம் திறப்பு விழாவில் 15 தி.மு.க., கவுன்சிலர்கள் உள்பட 28 கவுன்சிலர்கள் விழாவை புறக்கணித்தனர்.
முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து ரூ.76.79 கோடி செலவில் கட்டப்பட்ட 42 அறிவு சார் மையங்களை காணொளி மூலம் திறந்து வைத்தார்.
தேனி அறிவு சார் மையத்தை கலெக்டர் ஷஜீவனா, நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். கமிஷனர் ஜஹாங்கீர்பாஷா முன்னிலை வகித்தார்.
தி.மு.க.,கவுன்சிலர்கள் பாலமுருகன், நாராயணபாண்டியன், அ.தி.மு.க..,கிருஷ்ண பிரபா பங்கேற்றனர். துணைத் தலைவர் செல்வம் உள்ளிட்ட 15 தி.மு.க., கவுன்சிலர்கள், 7 அ.தி.மு.க., காங்., 3, அ.ம.மு.க.,2, பா.ஜ.,1,சுயே 1 என மொத்தம் 28 கவுன்சிலர்கள் விழாவில் பங்கேற்க வில்லை.
மையத்தில் மாணவர்கள், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள் படிக்கும் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.