/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஓராண்டு சிறை
/
இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஓராண்டு சிறை
இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஓராண்டு சிறை
இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஓராண்டு சிறை
ADDED : பிப் 01, 2025 05:35 AM
தேனி: இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி திருமணம் செய்ய மறுத்த கோவிந்தநகரம் இளைஞர் அஜித்குமாருக்கு 27, ஓராண்டு சிறை, ரூ.3 லட்சம் அபராதம் விதித்து மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தேனி அருகே கோவிந்தநகரம் வடக்குத்தெரு காவியா 25. அதேப்பகுதி அஜித்குமார் 27. இருவரும் காதலித்தனர். அஜித்குமார் திருமணம் செய்வதாக கூறி, உறவு வைத்துக் கொண்டனர். காவியா கர்ப்பமடைந்தார். 2020 மார்ச்சில் காவியாவும், அவரின் பெற்றோரும் திருமணம் செய்து கொள்ளுமாறு, அஜித்குமாரின்வீட்டிற்கு சென்று அவரது தாய் கனியிடம், கர்ப்பமடைந்த விபரத்தை தெரிவித்தார்.
இதற்கு கனி, காவியாவை தாக்கி கீழே தள்ளி, அவதுாறாக பேசினார். காவியாவின் தாய் நீலாவிடம் ரூ.25 ஆயிரம் வழங்கிவிடுகிறோம். மகனை விட்டு விலகிட வேண்டும் என மிரட்டினர். காவியாஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அஜித்குமார், அவரது தாயாரை கைது செய்தனர். இந்த வழக்கு மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு வழக்கறிஞர் குருவராஜ் ஆஜரானார்.
நேற்று விசாரணை முடிந்து குற்றவாளி அஜித்குமாருக்கு ஓராண்டு சிறை, ரூ.3 லட்சம் அபராதம் விதித்து, அபராதத் தொகையை நீதிமன்றத்தில் நேரடியாக செலுத்தவும், அஜித்குமாரின் தாய் கனி ரூ.2 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும். தவறினால் ஒரு மாதம் சிறை தண்டனை என நீதிபதி அனுராதா தீர்ப்பளித்துள்ளார்.