/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
'கேலோ' இந்தியா விழிப்புணர்வு போட்டிகள்
/
'கேலோ' இந்தியா விழிப்புணர்வு போட்டிகள்
ADDED : ஜன 14, 2024 11:14 PM
தேனி, : தமிழகத்தில் ஜன.19 முதல் ஜன.31 வரை கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டிகள் நடக்க உள்ளன. இப்போட்டிகள் தொடர்பாக விழிப்புணர்வுஏற்படுத்த பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல், ஓவியம், பேச்சுப்போட்டிகள் தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
மாணவிகள் பிரிவில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் சுக்காங்கல்பட்டி குட்சாம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி செம்மொழி, போடி பங்கஜம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் திவ்யதா, ஜீவலட்சுமி, ஓவியப்போட்டியில் மாணவிகள் பூர்விகா வெண்பா, பழனிசெட்டிப்பட்டி பழனியப்பா மேல்நிலைப்பள்ளி மாணவி பிரவீணா, தேக்கம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி முத்துவாசகி.
பேச்சுப்போட்டியில் பழனிசெட்டிப்பட்டி பழனியப்பா மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சுவாதி, ராமலட்சமி, சாதனா வெற்றி பெற்றனர்.
மாணவர்கள் பிரிவில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் அல்லிநகரம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சத்தியப்பிரியன், கிருபாகரன், கொண்டுராஜா உயர்நிலைப்பள்ளி மாணவர் லோகேஸ் நாகராஜ், ஓவியப்போட்டியில் பூதிப்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் மணிகண்டன், பெரியகுளம் புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தீபக்குமார், ஜெயராம், பேச்சுப்போட்டியில் அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி தெய்வேஸ்வரன், தேனி கொண்டுராஜா உயர்நிலைப்பள்ளி சபரீஸ்வரன், தேனி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி நிதின் வெற்றி பெற்றனர்.