ADDED : ஜன 14, 2024 11:29 PM

கூடலுார், : விவேகானந்தர் ஜெயந்தி மற்றும் தேசிய இளைஞர் தின விழா கூடலுார் ஹிந்து முன்னணி சார்பில் பழைய பஸ் ஸ்டாண்டில் நடந்தது. நகரப் பொதுச் செயலாளர் ஜெகன் தலைமை வகித்தார். முன்னதாக புது பஸ் ஸ்டாண்டில் இருந்து மெயின் பஜார் வழியாக பழைய பஸ் ஸ்டாண்ட் வரை போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. விவேகானந்தரின் பொன்மொழிகள், அறிவுரைகள் குறித்து விளக்கப்பட்டன. ஹிந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் கணேசன், மாவட்டச் செயலாளர்கள் ராமகிருஷ்ணன், சசிகுமார், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ராம் செல்வா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தேனி: சீலையம்பட்டி இந்து நடுநிலைப்பள்ளியில் வினேகானந்தர் பிறந்த நாள் விழா நடந்தது. பள்ளிச்செயலாளர் சண்முகநாதன் தலைமை வகித்தார். டி.கே.வி., கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, முருகன் பங்கேற்றனர். தலைமை ஆசிரியர் சோம சுந்தரபாண்டியன் வரவேற்றார்.
பேச்சு, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவை ஆசிரியர்கள் பராசக்தி, சரவணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.