/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சாய்பாபா கோயிலில் பூத்த பிரம்ம கமலம் பூ
/
சாய்பாபா கோயிலில் பூத்த பிரம்ம கமலம் பூ
ADDED : டிச 08, 2025 06:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் இரவில் பூத்த பிரம்ம கமலம் பூவினை பக்தர்கள் வணங்கிச் சென்றனர்.
இக்கோயிலில் வியாழக் கிழமைகளில் நடக்கும் பூஜைகளில் பங்கேற்க அதிகளவில் சாய்பாபா பக்தர்கள் வந்து செல்வர். நேற்று முன்தினம் இரவு கோயிலில் பிரம்ம கமல செடியில் இருந்து பூ பூத்திருந்தது. பக்தர்கள் பார்த்து வணங்கி பிரார்த்தனை செய்து சென்றனர். சாய்பாபாவிற்கு சிறப்பு பூஜை நடந்தது. பக்தர் வித்யா கூறியதாவது: இப்பூவானது ஆண்டுக்கு ஒரு முறை இரவில் மட்டுமே பூக்கும் பூவாகும். தெய்வீக மணம் வீசும். அபூர்வமான இந்த பூவினை பார்த்தாலே ஐஸ்வர்யம் கிடைக்கும் என்பது ஆன்மிக நம்பிக்கை., என்றார்.-

