/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வீட்டில் மலர்ந்த பிரம்ம கமல மலர்கள்
/
வீட்டில் மலர்ந்த பிரம்ம கமல மலர்கள்
ADDED : ஜூன் 19, 2025 03:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தமபாளையம்:ஆனைமலையன் பட்டியில் வசிக்கும் விவசாயி பாஸ்கரன் - லதா தம்பதியர் தங்கள் வீட்டில் பிரம்ம கமலம் செடியினை வளர்த்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு 10 பிரம்ம கமல மலர்கள் மலர்ந்தது. பிரம்ம கமல செடிக்கு தீபாராதனை காட்டி குடும்பத்தினர் வழிபட்டனர்.இப் பூக்கள் காலையில் சூரிய வெளிச்சம் வந்தவுடன் இதழ்களை மூடிக்கொண்டது.
தம்பதியர் கூறுகையில், கடந்த ஆறு ஆண்டுகளாக இச் செடியை வளர்த்து வருகின்றோம். முதலில் 3 ஆண்டுகளுக்கு பின் ஒரு முறை பூத்தது. அதன் பின் 2 ஆண்டுகள் கழித்து இப்போது பூத்துள்ளது என்றனர்.