ADDED : ஜன 08, 2026 05:23 AM
ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பி.புதுாரில் கும்பாபிஷேகம் நடந்த பட்டவர் கோயிலில் உண்டியலை உடைத்து ரூ.1.85 லட்சம் திருடு போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆண்டிபட்டி ஒன்றியம் புள்ளிமான்கோம்பை அருகே பி.புதுாரைச் சேர்ந்தவர் செல்வம் 42. இவர் 15 கிராம பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட பட்டவர்கோயில் நாட்டாமையாக உள்ளார். இக்கோயிலில் 36 நாட்களுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது. மறு பூஜை நடைபெற உள்ளது. பங்காளிகளிடம் வசூலிக்கப்பட்ட வரி,நன்கொடை பணம் ஆகியவற்றை கோயில் உண்டியலில் வைத்திருந்தனர். ஜன.5 மாலையில் செல்வம் கோயிலை பூட்டிவிட்டு, விளக்குகளை எரிய விட்டு சென்றார். மறுநாள் காலையில் கோயில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, கதவு உடைக்கப்பட்டிருந்தது. உண்டியலில் வைத்திருந்த வரி மற்றும் காணிக்கை பணம் 1.85 லட்சம் திருடுபோனது. இதில் ஈடுபட்ட நபர்களை போலீசார் விசாரிக்கின்றனர்.

