UPDATED : ஜூலை 16, 2026 05:03 PM
ADDED : ஜூலை 16, 2026 04:23 PM
அ நிறம் | அளவு
போடி;போடி அருகே துரைராஜபுரத்தை சேர்ந்தவர் அய்யனார் 32 .
அங்கு உள்ள பாலாற்று அய்யனார் கோயிலில் பூஜாரியாக வேலை செய்கிறார். வாரம் இரு நாட்கள் கோயலை திறந்து பூஜைகள் செய்வது வழக்கம். இந்நிலையில் நேற்று அய்யனார் கோயிலுக்கு சென்ற போது கோயில் கருவறை, பொருட்கள் வைக்கும் அறையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே பார்த்த போது அறையில் இருந்த 2 குத்துவிளக்கு, பொங்கல் பானைகள் திருடு போனது. சி.சி.டி.வி., கேமராவில் பார்த்ததில் அடையாளம் தெரிந்த, பெயர் தெரியாத நபர் திருடி சென்றது தெரிந்தது. புகாரில் போடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
