UPDATED : ஜூலை 16, 2026 05:29 PM
ADDED : ஜூலை 16, 2026 04:35 PM
கம்பம்:காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருந்துவப்பிரிவு சார்பில் முதியோர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமில் முதியோர்களுக்கு 60 வயதுக்கு மேல் வரக்கூடிய மூட்டுவலி, தோல் நோய், வயிறு, குடல், சிறுநீரக நோய்கள், பெண்களுக்கு ஏற்படும் மார்பகம், கர்ப்பவாய் புற்று, ஞாபக மறதி , அல்ஸீமர்ஸ் நடுக்கு வாதம், மன அழுத்தம், உடல் சோர்வு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது,
வயதான காலத்தில் பாதிக்கப்படாமல் இருக்க தினமும் நடை பயிற்சி , மூச்சு பயிற்சி செய்வது பற்றி விளக்கப்பட்டது. முகாமில் பங்கேற்றவர்களுக்கு வல்லாரை , முத்து சிப்பி மாத்திரைகள் உளுந்து மற்றும் பிண்ட தைலங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் டாக்டர்கள் தாரணி , அரவிந்த், சித்தா டாக்டர் சிராசுதீன் ஆகியோர் பங்கேற்றனர்.
