UPDATED : ஜூலை 16, 2026 05:29 PM
ADDED : ஜூலை 16, 2026 04:36 PM
அ நிறம் | அளவு
போடி:போடி அருகே சிலமலை, சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி தேசிய பசுமைப்படை அமைப்பிற்கு 'தி கிரீன் லைப் பவுண்டேஷன்' சார்பில் மரக்கன்றுகள் பராமரிப்பு உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. துணைத் தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். செயலாளர் சுந்தரம், பொருளாளர் மணிவண்ணன், நிர்வாக குழு உறுப்பினர்கள் வனிதா, பனை முருகன், செந்தில்ராஜ், குருநாதன், அர்ஜுனப் பெருமாள் முன்னிலை வகித்தனர்.
பள்ளி வளாகப் பகுதியில் மரக்கன்றுகள் நடவும், பராமரிப்பு செய்திடும் வகையில் மண்வெட்டி, கடப்பாறை, தட்டு, பூவாளி உள்ளிட்ட தளவாட பொருட்களை பவுண்டேஷன் சார்பில் பள்ளி தலைமையாசிரியர் அமுதா ராஜலட்சுமியிடம் வழங்கினர். சிலமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் பனை மரக்கன்றுகள் நடப்பட்டன.
