/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மூணாறில் போலீசாரை வரவழைத்து திருமணத்தை நிறுத்திய மணப்பெண்
/
மூணாறில் போலீசாரை வரவழைத்து திருமணத்தை நிறுத்திய மணப்பெண்
மூணாறில் போலீசாரை வரவழைத்து திருமணத்தை நிறுத்திய மணப்பெண்
மூணாறில் போலீசாரை வரவழைத்து திருமணத்தை நிறுத்திய மணப்பெண்
ADDED : மே 30, 2025 03:32 AM
மூணாறு: தாலி கட்ட ஒரு சில மணி நேரத்திற்கு முன்பு தமிழகத்தைச் சேர்ந்த மணப்பெண் போலீசாரின் உதவியுடன் திருமணத்தை தடுத்து நிறுத்தினார்.
இடுக்கி மாவட்டம், மூணாறு அருகே மறையூர் மேலாடியைச் சேர்ந்த 25 வயதுடையவருக்கும், தமிழகம் திருப்பூரைச் சேர்ந்த 22 வயது இளம் பெண்ணுக்கும் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மறையூர் பகுதியில் உள்ள கோயிலில் நேற்று முன்தினம் திருமணம் நடக்க இருந்தது. அதற்கு திருப்பூரில் இருந்து மணப்பெண்ணுடன் உறவினர்கள் மே 27ல் மறையூர் வந்தனர்.
தாலி கட்ட ஒரு சில மணி நேரம் மட்டும் இருந்த நிலையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மணப்பெண் தனக்கு விருப்பம் இல்லாமல் திருமணம் நடக்க இருப்பதாகவும், அதனை தடுத்து நிறுத்துமாறும் கண்ணீர் மல்க கூறினார். சம்பவ இடத்திற்குச் சென்று விசாரித்த மறையூர் போலீசார் இரு வீட்டாரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மணப்பெண் திருமணம் செய்து கொள்ள மறுத்து உறுதியுடன் இருந்தார்.
அதனால் இரு வீட்டாரும் பிரிந்து சென்றதால் திருமணம் தடைபட்டது.