UPDATED : நவ 05, 2026 12:28 AM
ADDED : நவ 04, 2026 06:12 PM

அ நிறம் | அளவு
மூணாறு: இடுக்கி மாவட்டம் அடிமாலி அருகே 200 ஏக்கர் பகுதியை சேர்ந்தவர் ராஜா.
குடும்பத்தினருடன் வசித்துவருகிறார். இவரது மகன் அம்ரூத் நேற்று (நவ.,3) இரவு தண்ணீர் குடிக்க 'பிரிட்ஜை' திறந்தார். அதனுள் இருந்து புகை வந்தது. சில நிமிடங்களில் பிரிட்ஜ் தீப்பற்றி எரிய துவங்கியது. அதனை அணைக்க முடியாததால் ராஜா, அவரது குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறினர். தீப்பற்றிய பிரிட்ஜ் வெடித்து சிதறியதில் சமையல் அறை முழுவதும் தீ பரவியது. அங்கிருந்த பொருட்கள் தீயில் சேதமடைந்தன. சம்பவ இடத்திற்கு வந்த அடிமாலி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
