/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேங்கும் மழை நீரால் பாலம் பலம் இழக்கும் அபாயம்
/
தேங்கும் மழை நீரால் பாலம் பலம் இழக்கும் அபாயம்
ADDED : ஜூலை 13, 2025 12:27 AM

கூடலுார்: கூடலுார் அருகே முல்லைப் பெரியாற்றின் பாலத்தில் தொடர்ந்து மழைநீர் தேங்கி வருவதால் பாலம் பலம் இழக்கும் அபாயம் உள்ளது.
கூடலுாரில் இருந்து குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, சுருளி அருவிக்கு செல்லும் ரோட்டில் முல்லைப் பெரியாற்றின் குறுக்கே பாலம் உள்ளது. இதனை ஒட்டி விளைநிலங்கள் அதிகம் உள்ளதால் வாகனப் போக்குவரத்து அதிகம். மேலும் கேரளாவில் இருந்து சுருளி அருவிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் இவ்வழியாக அதிகம் செல்கின்றனர்.
பாலத்தின் துவக்க பகுதியில் பல மாதங்களாக மெகா சைஸ் பள்ளம் உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் தொடர்ந்து மழைநீர் தேங்கியுள்ளது. பாலம் பலம் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அப்பகுதியில் சீரமைப்பு பணி செய்ய நெடுஞ்சாலைத் துறையினர் முன்வர வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.