தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ பி.எஸ்.என்.எல்., இ-சிம் பெறுவதில் சிக்கல்: கட்டணம் செலுத்தி காத்திருக்கும் அவலம்

பி.எஸ்.என்.எல்., இ-சிம் பெறுவதில் சிக்கல்: கட்டணம் செலுத்தி காத்திருக்கும் அவலம்

பி.எஸ்.என்.எல்., இ-சிம் பெறுவதில் சிக்கல்: கட்டணம் செலுத்தி காத்திருக்கும் அவலம்


UPDATED : ஜூன் 06, 2026 04:16 PM

ADDED : ஜூன் 06, 2026 03:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 06, 2026 04:16 PM ADDED : ஜூன் 06, 2026 03:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி:தேனி மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல். அலுவலகங்களில் இ-சிம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்தியும் காத்திருக்கின்றனர்.

மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் பலரும் அந்நிறுவனத்தின் புதிய அறிமுகமாக இ-சிம் வசதியை பயன்படுத்துகின்றனர். கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் புதிதாக இ-சிம் சேவை வழங்கப்படவில்லை. சிலர் இ-சிம் கேட்டு விண்ணப்பித்தும் அவர்களுக்கு அச்சேவை கிடைக்கவில்லை. மேலும் புதிதாக இ-சிம் சேவை கேட்க்கும் வாடிக்கையாளர்களுக்கு, அலைபேசி எண்களை பெற்று கொண்டு நாங்கள் அழைக்கும்போது வருமாறு கூறி அனுப்பி வைக்கின்றனர். இதனால் இ-சிம்மிற்காக வாடிக்கையாளர்கள் பலர் புதிய இ-சிம் பெறுவதற்கு ரூ.51 முதல் ரூ.100 வரை கட்டணம் செலுத்திவிட்டு காத்திருக்கின்றனர்.தேனி பி.எஸ்.என்.எல். அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சில தொழில்நுட்ப காரணங்களுக்காக தமிழ்நாடு முழுவதும் தற்போது இ-சிம் வழங்க வேண்டாம் என தலைமை அலுவலகத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. தலைமை அலுவலகத்தில் உள்ள இயந்திரத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் மாநிலம் முழுவதும் இ-சிம் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் இச்சேவை மீண்டும் வழங்கப்படும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us