/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நாட்டு வெடிகுண்டை கடித்த எருமை மாட்டின் தாடை கிழிந்தது
/
நாட்டு வெடிகுண்டை கடித்த எருமை மாட்டின் தாடை கிழிந்தது
நாட்டு வெடிகுண்டை கடித்த எருமை மாட்டின் தாடை கிழிந்தது
நாட்டு வெடிகுண்டை கடித்த எருமை மாட்டின் தாடை கிழிந்தது
ADDED : அக் 06, 2025 04:46 AM

சின்னமனுார்,: சின்னமனுார் அருகே எரசக்கநாயக்கனுாரில் மேய்ச்சலுக்கு சென்ற எருமை மாடு தரையில் கிடந்த நாட்டு வெடிகுண்டை கடித்த போது, அதன் தாடை கிழிந்து பலத்த காயம் ஏற்பட்டது.
இக்கிராமத்தில் உள்ள மந்தைகுளம் தெருவை சேர்ந்தவர் அழகர். இவருக்கு சொந்தமான எருமை மாடு நேற்று காலை 11:00 மணியளவில் மேய்ச்சலுக்கு சென்றது.
எரசக்கநாயக்கனுாரில் இருந்து சின்ன ஒவுலாபுரம் செல்லும் ரோட்டில் டாஸ்மாக் மதுபான கடை அருகே இருந்த இடத்தில் கிடந்த நாட்டு வெடிகுண்டை, தீவனம் என நினைத்த எருமை மாடு கடித்துள்ளது.
கடித்தவுடன் வெடித்ததால், எருமை மாட்டின் தாடைப் பகுதி கிழிந்து தொங்கியது. அலறல் சத்தத்துடன் எருமை மாடு ஓடியது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும், வெடித்த சத்தத்தை கேட்டு அலறியடித்து ஓடினர்.
நாட்டு வெடிகுண்டு கிடந்த இடத்திற்கு அருகில் டாஸ்மாக் கடையை அகற்றிய இடத்தில் தற்போது சட்டவிரோதமாக மது விற்பனை நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நாட்டு வெடிகுண்டு வேட்டைக்கு பயன்படுத்துவதாக இருக்கலாம் என்றும், இரு தரப்பினருக்கு இடையே எழும் மோதலில் பயன்படுத்தவும் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தற்போது கிராமங்களில் சர்வ சாதாரணமாக நாட்டு வெடி குண்டுகள், நாட்டு துப்பாக்கிகள் புழக்கம் அதிகரித்துள்ளது.
சின்னமனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.