/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் குவியும் கட்டட இடிபாடுகள்
/
தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் குவியும் கட்டட இடிபாடுகள்
தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் குவியும் கட்டட இடிபாடுகள்
தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் குவியும் கட்டட இடிபாடுகள்
ADDED : ஆக 10, 2025 03:00 AM

பெரியகுளம்: திண்டுக்கல் - - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கட்டட இடிபாடுகள் கொட்டப்படுவதால் இரவில் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் வழியாக திண்டுக்கல் -- குமுளி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. மாவட்ட எல்லையான பரசுராமபுரத்தில் துவங்கி கீழக்கூடலூர் வரை 30 க்கும் அதிகமான கிராமங்கள் வழியாக பைபாஸ் ரோடு செல்கிறது. பல இடங்களில் கிராம சாலைகள் பைபாஸ் உடன் இணைகின்றன. தேவதானப்பட்டி முதல் தேனி மதுராபுரி வரை 18 கி.மீ., தூரத்திற்கு இடைப்பட்ட ரோட்டோரங்களில் கட்டடஇடிபாடுகள், செப்டிக் டேங்க் கழிவுகள், குப்பை, இறைச்சி கழிவுகள் தொடர்ந்து கொட்டப்படுகிறது.
ரோட்டோரங்களில் கொட்டுபவர்களை யார் தடுப்பு, யார் கேள்வி கேட்பது என்பது இல்லாததால் ரோட்டை குப்பையாக்கும் முயற்சி தொடர்கிறது.
இரு தினங்களுக்கு முன் தேவதானப்பட்டியிலிருந்து தேனி நோக்கி டூவீலரில் சென்றவர், வடுகபட்டி பிரிவு அருகே கொட்டப்பட்டிருந்த கட்டட இடிபாடுகளில் மோதி காயமடைந்தார்.