/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இரட்டை மாட்டு வண்டி பந்தயம் ரோட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்
/
இரட்டை மாட்டு வண்டி பந்தயம் ரோட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்
இரட்டை மாட்டு வண்டி பந்தயம் ரோட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்
இரட்டை மாட்டு வண்டி பந்தயம் ரோட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்
ADDED : ஆக 02, 2025 12:48 AM

சின்னமனூர்: சின்னமனூர் ரேக்ளா ரேஸ் நண்பர்கள் சங்கம் சார்பில் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. சின்னமனூரிலிருந்து மேகமலை ரோட்டில் நடைபெற்ற இப்போட்டியில் பல்வேறு மாவட்ட வீரர்கள் தங்கள் மாட்டு வண்டிகளுடன் பங்கேற்றனர். 8 கி.மீ.. தூரத்திற்கு நடைபெற்ற இந்த போட்டியில் தேன்சிட்டு, தட்டான் சிட்டு, பூஞ்சிட்டு, பெரியமாடு, நடுமாடு, கரிச்சான் உள்பட பல பிரிவுகளில்போட்டிகள் நடைபெற்றது.
ஒவ்வொரு பிரிவிலும் 10 க்கும் மேற்பட்ட வண்டிகள் பங்கேற்றன.
போட்டிகளில் வெற்றி பெற்ற வண்டிகளுக்கு முதல் பரிசு ரூ.20 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.12 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ. 10 ஆயிரம் மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.
மாட்டு வண்டி பந்தயத்தை பார்க்க ரோட்டின் இரண்டு பக்கமும் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டிருந்தனர்.