/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கூடலுார்-வெட்டுக்காடு இணைப்பு பாலம் கட்ட வலியுறுத்தல்
/
கூடலுார்-வெட்டுக்காடு இணைப்பு பாலம் கட்ட வலியுறுத்தல்
கூடலுார்-வெட்டுக்காடு இணைப்பு பாலம் கட்ட வலியுறுத்தல்
கூடலுார்-வெட்டுக்காடு இணைப்பு பாலம் கட்ட வலியுறுத்தல்
ADDED : ஆக 02, 2025 12:48 AM

கூடலுார்: கூடலுாரில் இருந்து வெட்டுக்காடு செல்வதற்காக பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த இரும்பு நடை பாலம் இடிந்து விழுந்து பல மாதங்கள் ஆகியும் அப்பகுதியில் புதிதாக பாலம் கட்ட நடவடிக்கை இல்லை.
கூடலுாரில் இருந்து வெட்டுக்காடு பகுதிக்கு செல்வதற்காக காஞ்சிமரத்துறை வழியாக 10 கி.மீ., துாரத்தில் ரோடு வசதி உள்ளது.
இது தவிர தாமரைக்குளம் நுனிக்கரை வழியாக பெரியாற்றின் குறுக்கே நடைபாலம் வழியாக சென்றால் 4. கி.மீ., தூரத்தில் வெட்டுக்காட்டை அடைந்து விடலாம். நெல் விவசாயிகள் இப்பாதையை அதிகம் பயன்படுத்தி வந்தனர்.
நடைபாலம் முழுமையாக இடிந்து விழுந்து பல மாதங்கள் ஆகிறது. இதனால் விவசாயிகள் பல கி.மீ., துாரம் சுற்றி வர வேண்டிய சிரமம் ஏற்பட்டுள்ளதுடன்,
இடிந்து விழுந்த அதே பகுதியில் புதிய பாலம் அமைக்க விவசாயிகள் வலியுறுத்தினர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கலெக்டர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு அப்பகுதியில் புதிய பாலம் அமைத்து தருவதாக அறிவித்திருந்தனர்.
ஆனால் பழைய இரும்பு பாலம் உடைந்து விழுந்து பல மாதங்களாகியும் இதுவரை நடைபாலம் கூட அமைக்கவில்லை.
இதனால் விவசாயிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
நிதி ஒதுக்கீடு செய்து பெரியாற்றின் குறுக்கே வாகனங்கள் செல்லும் வகையில் புதிய பாலம் அமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.