ADDED : அக் 13, 2024 05:26 AM
ஆண்டிபட்டி: கண்டமனூர் அருகே கோவிந்தநகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆழ்வார்சாமி, உடல்நிலை சரியில்லாததால் மருத்துவ சிகிச்சைக்காக தேனியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் இவரது மகள் ஹேமாவதி மருத்துவமனைக்கு வந்து உடன் இருந்துள்ளார். ஆழ்வார்சாமியின் பக்கத்து வீட்டுக்காரர் அனுசுயாவிடம் தனது தகப்பனாரின் மருத்துவ சான்றை வாட்ஸ் அப்பில் எடுத்து அனுப்புமாறு போன் மூலம் ஹேமாவதி தகவல் தெரிவித்துள்ளார். அனுசுயா வீட்டிற்கு சென்று கதவைத் திறந்த போது கதவு தானாக திறந்து உள்ளது. இது குறித்து ஹேமாவதியிடம் அனுசுயா தகவல் தெரிவித்துள்ளார். வீட்டில் வந்து பார்த்தபோது 32 இஞ்ச் எல்.இ.டி., டி.வி., பீரோவில் இருந்த ஒரு பவுன் மதிப்புள்ள இரண்டு மோதிரங்கள் முக்கால் பவுன் தங்க கம்மல் மற்றும் குங்குமச்சிமிழ் உட்பட ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை யாரோ திருடி சென்றுள்ளனர். ஹேமாவதி கொடுத்த புகாரில் கண்டமனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.