/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்டத்தில் அரசு பஸ்களில் பொருத்தப்பட்ட கதவுகளை... பராமரியுங்கள் ; படிக்கட்டுகளில் ஆபத்தான பய ண ம் மேற்கொள்ளும் அவல நிலை

ADDED : ஆக 21, 2025 08:16 AM

தமிழகத்தில் அரசு பஸ்களின் படிக்கட்டுகளில் பயணிப்பது, விபத்துக்களை தடுக்க படிகட்டுகளில் கதவுகள் அமைக்கப்பட்டன.
இதற்காக இம்மாதிரியான பஸ்களை அரசு இயக்கி வருகிறது. இவை பயன்பாட்டிற்கு வந்ததால் படிக்கட்டு பயணங்கள் தவிர்க்கப்பட்டு, சில இடங்களில் விபத்துக்கள் குறைந்தன.
இதனால் மற்ற பஸ்கள், டவுன் பஸ்களில் கதவுகள் பொருத்தும் பணி தனியார் நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டன. ஒவ்வொரு பஸ்சிற்கும் சில லட்சங்கள் செலவு செய்து கதவுகள் பொருத்தப்பட்டன. இந்த திட்டம் அரசு டவுன் பஸ்களிலும் செயல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியவாறு பயணம் செய்வது தவிர்க்கப்பட்டது.
இந்த திட்டத்தை சில தனியார் பஸ்களும் பின்பற்றி கதவுகளில் படிக்கட்டுகள் அமைக்க துவங்கி உள்ளன.
ஆனால், அரசு பஸ்களில் பொருத்தப்பட்ட கதவுகள், சில மாதங்களிலேயே பழுதாகி விட்டன. பழுதான கதவுகள் பயணத்தின் போது இடையூறாக மாறின. இதனால் பல பஸ்களில் செயல்படாத கதவுகள், கயிறுகள் மூலம் கட்டி வைக்கப்பட்டு உள்ளன.
கதவுகள் பயன்பாடு இல்லாததால் சிலர் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்வது தொடர்கிறது.
போக்குவரத்துத்துறை ஊழியர்கள் கூறியதாவது: கதவுகள் பழுதடைந்தால் யார் சீரமைப்பது என தெரியவில்லை. தனியார் நிறுவனமும் பராமரிப்பு செய்வது இல்லை. பஸ்களின் பக்கவாட்டு பகுதிகளில் பொருத்திய கண்ணாடிகள் உடைந்தால் நடத்துநர், டிரைவர் சொந்த செலவில் சீரமைக்கும் நிலை உள்ளது.
பணிமனைகளில் பராமரிப்பு பணிக்கும் பணியாளர்கள் இல்லை. தனியார் நிறுவனம் பராமரிப்பு பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவும், விபத்துக்களை தவிர்க்க அனைத்து அரசு பஸ்களிலும் கதவுகள் பொருத்துவதையும், அவை தொடர்ந்து இயங்குவதையும் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.