/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விபத்தில் சிக்கிய பஸ் டிரைவர் 'சஸ்பெண்ட்'
/
விபத்தில் சிக்கிய பஸ் டிரைவர் 'சஸ்பெண்ட்'
ADDED : ஏப் 19, 2025 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு:
இடுக்கி மாவட்டம் கட்டப்பனையில் இருந்து பிப்.15ல் எர்ணாகுளத்திற்கு சென்ற கேரள அரசு பஸ் நேரியமங்கலம் அருகே மணியம்பாறை பகுதியில் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
அதில் கட்டப்பனை அருகே கீரித்தோடு பகுதியைச் சேர்ந்த சிறுமி அனிட்டா 14, இறந்தார்.
கன்டக்டர் உள்பட 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். விபத்து குறித்து கேரள அரசு பஸ் விஜிலன்ஸ் பிரிவினர் நடத்திய விசாரணயில் டிரைவர் மகேஷ் அலட்சியமாக பஸ்சை இயக்கியதால் விபத்து ஏற்பட்டதாக தெரியவந்தது. அவரை பணியில் இருந்து சஸ்பெண்ட்' செய்தனர்.

