/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பு பணி துவங்கியது கம்பத்தில் போக்குவரத்து மாற்றம் அமல்

ADDED : நவ 13, 2024 07:14 AM
கம்பம் : கம்பம் பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணி துவங்கியுள்ளதால், நேற்று முதல் கம்பத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
கம்பம் பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணி நகராட்சி சார்பில் ரூ.1.75 கோடியில் மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டு பணிகள் நேற்று காலை துவங்கியது. பணிகள் நடைபெறும் போது பொதுமக்கள, பஸ் ஸ்டாண்டில் கடைகள் வைத்துள்ளவர்கள் என அனைவரின் கருத்துக்களையும் கேட்டு முடிவு செய்ய நகராட்சியில் ஆலோசனை கூட்டம் க நகராட்சி தலைவர் வனிதா தலைமையில் நடைபெற்றது.
அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி, மதுரை, திண்டுக்கல், தேனியில் இருந்து கம்பத்திற்கு வரும் பஸ்கள் மற்றும் குமுளி, கூடலூரில் இருந்து வரும் பஸ்களும் காமயகவுண்டன்பட்டி ரோடு வழியாக சென்று அங்குள்ள 60 அடி ரோடு வழியாக பஸ் ஸ்டாண்டை அடைய வேண்டும்.
பஸ்ஸ்டாண்டில் இருந்து மதுரை, திண்டுக்கல், தேனி, கூடலூர், குமுளி செல்லும் பஸ்கள் அமராவதி தியேட்டர், மாரியம்மன் கோயில், பழைய பஸ்ஸ்டாண்ட், டிராபிக் சிக்னல் வழியாக புறப்பட்டு செல்லும் என்று நகராட்சி, டிராபிக் போலீஸ், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மாற்றம் செய்யப்பட்ட இந்த போக்குவரத்து நேற்று காலை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.