/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பஸ் ஸ்டாண்டிற்குள் வேகமாக இயக்கப்படும் பஸ்கள் பயணிகள் அவதி
/
பஸ் ஸ்டாண்டிற்குள் வேகமாக இயக்கப்படும் பஸ்கள் பயணிகள் அவதி
பஸ் ஸ்டாண்டிற்குள் வேகமாக இயக்கப்படும் பஸ்கள் பயணிகள் அவதி
பஸ் ஸ்டாண்டிற்குள் வேகமாக இயக்கப்படும் பஸ்கள் பயணிகள் அவதி
ADDED : நவ 24, 2025 05:44 AM
தேனி: தேனி நகரில் உள்ள பஸ் ஸ்டாண்டுகளின் உட்புறங்களில் செல்லும் பஸ்கள் அதிவேகத்தில் இயக்கப்படுவதால் பயணிகள் அவதிக்குள்ளாவதுடன், விபத்துக்களும் தொடர்கின்றன.
இந்நகர் பகுதியில் கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்ட், காமராஜர் நினை பஸ் ஸ்டாண்ட் உள்ளன. இதில் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்டில் முதலாவது, இரண்டாவது பிளாட்பாரங்களுக்கு செல்லும் பஸ்கள் மேற்கு நுழைவாயில் வழியாகவும், மூன்றாவது பிளாட்பாரங்களுக்கு செல்லும் பஸ்கள் வடக்கு நுழைவாயில் வழியாகவும் சென்று, வெளியேறுகின்றன. பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்குள் நுழையும் போது சில டிரைவர்கள் பஸ்களை அதிவேகத்தில் இயக்குகின்றனர். இதனால் ரோட்டை கடக்கும், பஸ் ஸ்டாண்டிற்குள் வரும் பயணிகள் விபத்தில் சிக்கி காயமடைவது தொடர்கிறது. சில மாதங்களுக்கு முன் இரு பஸ் ஸ்டாண்டுகளிலும் ரோட்டை கடந்தவர்கள் உயிரிழந்தது, குறிப்பிடத்தக்கது. பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்களை மெதுவாக இயக்க அரசு, தனியார் பஸ் டிரைவர்களை போக்குவரத்து கழக அதிகாரிகள், போலீசார் அறிவுறுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

