/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வியாபாரி தற்கொலை: மிரட்டியவர்களை கைது செய்யக்கோரி மறியல்
/
வியாபாரி தற்கொலை: மிரட்டியவர்களை கைது செய்யக்கோரி மறியல்
வியாபாரி தற்கொலை: மிரட்டியவர்களை கைது செய்யக்கோரி மறியல்
வியாபாரி தற்கொலை: மிரட்டியவர்களை கைது செய்யக்கோரி மறியல்
ADDED : ஆக 19, 2025 12:57 AM

சின்னமனூர்; சின்னமனூரில் பேன்சி ஸ்டோர் வியாபாரி சதீஷ் 33, தனது கடைக்குள்ளேயே துாக்கிட்டு தற்காலை செய்து கொண்டார். இவரை மிரட்டியவர்களை கைது செய்ய கோரி நகரில் பல இடங்களில் உறவினர்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
சின்னமனூர் வ.உ.சி. நகர் 5 வது தெருவில் வசிப்பவர் சதீஷ். இவருக்கு பவித்ரா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
சதீஷ் பழைய போலீஸ் ஸ்டேசன் ரோட்டில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். சதீஷ் வியாபாரத்திற்கு பலரிடம் கடன் வாங்கியுள்ளார். கடன் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர்.
இதனால் மனம் உடைந்த சதீஷ் நேற்று முன்தினம் இரவு தனது கடைக்குள்ளேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மனைவி,உறவினர்கள் அலைபேசியில் அழைத்த போது, பதிலில்லை என்பதால் கடைக்கு வந்து பார்த்துள்ளனர். கடை உள்புறமாக தாழிட்டு இருந்தது.
சந்தேகப்பட்டு கடை கதவை உடைத்து பார்த்த போது சதீஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்தது தெரிந்தது. போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை முடிந்த பின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள் பைபாஸ் ரோடு, நகராட்சி அருகில் ரோடு மறியல் செய்தனர்.
கடன் கொடுத்தவர்கள் சதிஷ்க்கு கொடுத்த நெருக்கடி காரணமாகவே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றும், நெருக்கடி கொடுத்தவர்களை கைது செய்ய கோரி உறவினர்கள் மறியல் செய்தனர்.
இதனால் தேனி கம்பம் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உததமபாளையம் டி.எஸ்.பி வெங்கடேசன் தலைமையிலான போலீசார் மறியல் செய்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச்செய்தனர்.