ADDED : ஜன 11, 2025 08:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி மாவட்ட வணிகர் சங்கங்கள் கூட்டமைப்பு, தொழிலாளர் நலத்துறை சார்பில், சில்லரை பலசரக்கு சங்க கூட்டரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் ஆனந்தவேல் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பொன்முருகன், ஆத்தியப்பன், ராதாகிருஷ்ணன், ராஜேஷ்கண்ணன், சீனிவாசன், ரவி ஆகியோர் முன்னிலைவகித்தனர்.
தொழிலாளர் நல உதவி ஆணையாளர் ஷியாம், மாவட்ட தொழிலாளர் நல ஆய்வாளர் சுதர்சன் பங்கேற்று, தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் நிதி உதவிகள், நிறுவனங்களில் தமிழ் மொழியில் பெயர் பலகை வைப்பதற்கான விதிமுறைகள் குறித்து விளக்கினர்.
நிகழ்வில் 14 வணிகர்கள் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

