/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போடியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பைபாஸ் ரோடு அவசியம் ஆக்கிரமிப்பால் 60 அடி ரோடு 30 அடியாக சுருங்கிய அவலம்
/
போடியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பைபாஸ் ரோடு அவசியம் ஆக்கிரமிப்பால் 60 அடி ரோடு 30 அடியாக சுருங்கிய அவலம்
போடியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பைபாஸ் ரோடு அவசியம் ஆக்கிரமிப்பால் 60 அடி ரோடு 30 அடியாக சுருங்கிய அவலம்
போடியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பைபாஸ் ரோடு அவசியம் ஆக்கிரமிப்பால் 60 அடி ரோடு 30 அடியாக சுருங்கிய அவலம்
ADDED : செப் 22, 2024 03:50 AM

போடி : போடியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பஸ் ஸ்டாண்டில் இருந்து திருமலாபுரம் வழியாக சாலைக் காளியம்மன் கோயில் வரை பைபாஸ் ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக, கேரளாவை இணைக்கும் வகையில் தேனி - மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் போடி அமைந்துள்ளது.
போடிமெட்டு, குரங்கணி, டாப் ஸ்டேஷன் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வகையில் போடி மெயின் ரோடு உள்ளது. இவ் வழியாக தினமும் தமிழக கேரளா பகுதியில் இருந்து ஏராளமான வாகனங்களும், சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர்.
போடி காமராஜ் பஜார் மெயின் ரோட்டில் தெருவோர கடைகள், கட்டடங்கள் ஆக்கிரமித்துள்ளதால் 60 அடி அகல மெயின் ரோடு தற்போது 30 அடியாக சுருங்கி உள்ளது.
பள்ளி கல்லூரிகளுக்கு மாணவர்கள் செல்லும், வரும் நேரங்களில் போக்குவரத்து நெரிசலில் மாணவர்கள் சிக்கி தவிக்கின்றனர். பி.ஹைச். ரோட்டில் ரோட்டை ஆக்கிரமித்து பிளாட்பார , மீன் கடைகள், லாரிகளை நிறுத்துவதால் மக்கள் நடந்த செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
போடியில் இருந்து தேனி மார்க்கமாக செல்ல போடி பஸ் ஸ்டாண்டில் இருந்து திருமலாபுரம், சாலைக் காளியம்மன் கோயில் வரை ரோட்டை அகலப்படுத்தி பைபாஸ் ரோடு ஆக மாற்றுவதன் மூலம் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணலாம்.
நெரிசலை தவிர்க்க மாற்று வழிகள்
பஸ் ஸ்டாண்டில் இருந்து கேரளா நெடுங்கண்டம், மூணாறு செல்லும் வாகனங்கள் ஸ்டேட் பாங்க் ரோடு, வஞ்சி ஓடை வழியாக இரட்டை வாய்க்கால் ரோட்டை பயன்படுத்தலாம். ஸ்டேட் பேங்க் ரோட்டில் பள்ளி நேரங்களில் மாணவர்கள் சிரமம் இன்றி செல்ல கனரக வாகனங்கள் செல்வதை தடை செய்ய வேண்டும்.
போக்குவரத்து நெரிசலை குறைக்க டிராபிக் பிரிவிற்கு இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., உட்பட 16 பேர் நியமனம் செய்யப்பட்டனர்.
இங்குள்ள சிலரை வேறு பணிகளுக்கு பயன்படுத்துவதால் தற்போது இன்ஸ்பெக்டர். எஸ்.ஐ., உட்பட 7 பேர் மட்டுமே பணி புரிவதால் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த முடியவில்லை. டிராபிக் பிரிவு முழுமையா செயல்பட எஸ்.பி., சிவபிரசாத் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பைபாஸ் அவசியம்
எஸ்.மணிகண்டன், போடி: போஜன் பார்க் முதல் காமராஜர் பஜார், தேவாரம் ரோடு, பி.ஹைச்., ரோட்டில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சியில் தீர்மானம் நிறைவற்றியும், நெடுஞ்சாலை துறை ஆக்கிரமிப்பு அகற்றாமல் மெத்தனம் காட்டி வருகிறது.
நெரிலை தவிர்க்க காமராஜ் பஜார், போடி பஸ் ஸ்டாண்ட் இருந்து திருமலாபுரம் வழியாக சாலைக் காளியம்மன் வரை பாரபட்சம் இன்றி ஆக்கிரமிப்புகள் அகற்றி பைபாஸ் ரோடு அமைக்க வேண்டும். இதனால் நகர் பகுதி வளர்ச்சி அடைவதோடு கிராமப்புற மாணவர்கள் பொதுமக்கள் பயன் அடைவார்கள்.
கிராம மக்கள் பயன்பெறுவர்
பி.கண்ணன், மேலச்சொக்கநாதபுரம்: காமராஜ் பஜார், பெரியாண்டவர் ஹைரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட் வரை உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆக்கிரமிப்பால் மக்கள் நடந்து கூட செல்ல சிரமம் அடைந்து வருகின்றனர்.
திருமலாபுரம் சாலைக் காளியம்மன் கோவில் வரை ரோடு அகலப்படுத்தி பாலம், ரோடு வசதி செய்து தர வேண்டும்.
தொலைநோக்கு பார்வையாக பைபாஸ் ரோடு அணிவதன் மூலம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
வர்த்தகம் வளர்ச்சி அடைவதோடு, திருமலாபுரம், மேலச்சொக்கநாதபுரம், விசுவாசபுரம், பத்திரகாளிபுரம் கிராம மக்கள் பெரிதும் பயன் அடைவார்கள்.