/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தென்னையில் ஊடுபயிராக முட்டைக்கோஸ், பப்பாளி
/
தென்னையில் ஊடுபயிராக முட்டைக்கோஸ், பப்பாளி
ADDED : செப் 30, 2024 05:08 AM

கூடலுார்: தென்னையில் ஊடுபயிராக முட்டைக்கோஸ் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து விவசாயிகள் அசத்தி உள்ளனர்.
கூடலுார் பகுதியில் தென்னை சாகுபடி அதிகமாக இருந்தது.
சில ஆண்டுகளுக்கு முன் தென்னையில் ஏற்பட்ட வாடல் நோயினால் மரங்கள் அழிக்கப்பட்டு மாற்றுப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில் தற்போது மீண்டும் தென்னை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 25 அடி இடைவெளி விட்டு தென்னை நடவு செய்யப்படுகிறது.
இது பெரிய மரமாக வளர்ந்து பலன் கிடைக்க நான்கு ஆண்டுகளாகும். இந்த நான்கு ஆண்டுகள் வரை தென்னையில் ஊடுபயிராக பல்வேறு பயிர்களை நடவு செய்வதன் மூலம் விவசாயிகளுக்கு வருவாயை ஈட்ட முடியும்.
விவசாயிகள் கூறியதாவது: ஒருங்கிணைந்த பண்ணை விவசாயத்தில் தென்னையில் ஊடுபயிராக முட்டைக்கோஸ், வெங்காயம், மிளகாய், காய்கறி வகைகள், பூ வகைகள் பயிரிடலாம்.
தென்னை நடவு செய்து பலன் கிடைக்க நான்கு ஆண்டுகளுக்கு மேலாகும்.
அதுவரை விவசாயிகளுக்கு வருவாய் கிடைப்பதற்கு இது பெரிதும் பலன் உள்ளதாக இருக்கிறது., என்றனர்.