/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனியில் ஒரே பள்ளியில் படிக்கும் 17 இரட்டையர்கள் புகைப்படத்துடன் காலண்டர் வெளியீடு

ADDED : ஆக 05, 2025 06:52 AM

தேனி : தேனி மேரிமாதா சி.எம்.ஐ., பப்ளிக் பள்ளியில் 17 இரட்டையர் படிக்கின்றனர்.
தேனி சிட்கோ அருகில் மேரிமாதா சி.எம்.ஐ., பப்ளிக் பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 17 இரட்டையர்கள் எல்.கே.ஜி., முதல் மேல்நிலை வகுப்புவரை படிக்கின்றனர்.
இவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பள்ளியில் நேற்று இரட்டையர் தினவிழா கொண்டாடப்பட்டது. ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி., வினோஜி தலைமை வகித்தார்.
பள்ளி முதல்வர் ராபின்ஸ் ஜேக்கப் முன்னிலை வகித்தார். இரட்டையர் தினத்தை முன்னிட்டு 17 ஜோடி இரட்டையர்களின் புகைப்படம் அடங்கிய காலண்டர் பள்ளி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டது. பின் இரட்டையர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.