/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேசிய ஸ்கேட்டிங் போட்டி அரசு பள்ளி மாணவி சாதனை
/
தேசிய ஸ்கேட்டிங் போட்டி அரசு பள்ளி மாணவி சாதனை
ADDED : ஆக 05, 2025 06:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி பெரியகுளம் ஒன்றியம், சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி 6ம் வகுப்பு மாணவி திருனிகா 11. இவர் சென்னையில் ஆக. 2 மற்றும் 3ல் தேசிய அளவிலான 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்காக நடந்த 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஸ்கேட்டிங் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றார். இரு போட்டியில் முதலிடம் பெற்று இரு தங்கப்பதங்களை வென்றார். ஆக., 26ல் மலேசியாவில் நடக்கும் சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் இந்தியா சார்பில் விளையாட உள்ளார்.
மாணவி திருனிகாவை பள்ளி தலைமை ஆசிரியர் பாண்டியன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். -